இந்தியர்கள் அதிகளவுக்கு மொபைல் போன், இணையவெளியைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் இலவசமாக தனது சேவையை தொடங்கிய ஜியோ தற்பொழுது இந்தியாவில் உள்ள அனைத்து வகையான வாடிக்கையாளர்களையும் கவர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

ரூ. 99, ரூ. 153, ரூ. 297, மற்றும் ரூ. 594 ஆகிய நான்கு ஜியோபோன் திட்டங்களை அந்நிறுவனம் தற்பொழுது அதன் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய செய்துள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் ஜியோபோன் ஆல்-இன்-ஒன் திட்டங்கள் போன்ற ஜியோ அல்லாத குரல் அழைப்பு நிமிடங்களை வழங்கவில்லை என்பதனால், ஜியோ டெல்கோ நிறுவனம் நீக்கம் செய்ய முடிவு செய்து இந்த திட்டங்களை அகற்றியுள்ளது.