உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜாக்கிசான்.இவருடைய திரைப்படம் என்றாலே அதிரடியும், காமெடியும் கலந்து இருக்கும்.
இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி தற்காப்புக் கலைஞர், சண்டைக்கலைஞர்,திரைப்படத் தயாரிப்பாளர், அதிரடி நடன இயக்குனர் ,மற்றும் பாடகர் என பல முகங்களைக் கொண்டவர்.இவருக்கு உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அதுமட்டுமின்றி 2016 ஆம் ஆண்டு உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது நடிகராக நடிகர் ஜாக்கிசான் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகர் ஜாக்கிசான் நடிப்பில் தயாரான “வான்கார்ட்” திரைப்படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியாகி த வைரலாக வந்துகொண்டிருக்கிறது.அதிரடி சாகச படமாக உருவான படம்தான் இந்த “வான்கார்ட்”மேலும் ஸ்டான்லி டோன்ஸ் இந்த படத்தை எழுதி ,இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் நடிகர் ஜாக்கி சான் ,யாங் யாங், மியா முகி ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி 2020 அன்று சீனாவில் திரையிட முடிவு செய்தார்கள் .ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி சீனாவில் திரையிடப்பட்டது.மேலும் இந்தப் படம் இந்தியாவில் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்தின் ட்ரைலர் இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாக வந்துகொண்டிருக்கிறது இதோ அந்த ட்ரைலர் உங்களுக்காக.
https://youtu.be/ObWbXbmfuAk