அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை கண்ணன் என்பவருக்கு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம் செய்து கண்ணன் அலங்காநல்லூரில் முதல் பரிசை வென்றதாக புகார் எழுந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை செய்துள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் பரிசு வென்ற கருப்பண்ணன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ஜல்லிக் கட்டில் வென்றவர்களுக்கு நாளை பரிசு வழங்கப்பட இருந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.