கொரோனா ஊரடங்கு முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் பாரம்பர்ய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்காக தனித்தனி தேதிகளையும், சில விதிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்திலும், 15-ம் தேதி பாலமேட்டிலும், 16-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும். ஜல்லிக்கட்டை காண 50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது