ஹோண்டா நிறுவனம் இரு சக்கர தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அரங்கில் பல நாடுகளில் தனது கிளைகளை நிறுவி சிறப்பாக சேவை புரிந்து வருகிறது. தற்போது ஹோண்டா நிறுவனமானது அதன் ஜப்பானிய இருசக்கர வாகனங்களின் வரிசையை இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைனெஸ் சிபி350 பைக்கின் மூலமாக அப்டேட் செய்துள்ளது.
இந்தியாவில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக கொண்டுவரப்பட்ட இந்த ஹோண்டா பைக் ராயல் என்பீல்டு பைக்குகளை போல் ரெட்ரோ தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இந்த 350சிசி பைக் ஹோண்டா ஜிபி350 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது ஐப்பானியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.