கோலிவுட்டில் மிகவும் விரும்பப்படும் இயக்குனர்தான் செல்வராகவன். தற்போது பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இந்த அண்ணன் தம்பி காம்போ எப்பொழுது இணைவார்கள் என்று கோலிவுட்டில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். காரணம் துள்ளுவதோ இளமை, 7 ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை என இந்த அண்ணன், தம்பி கூட்டணி இணைந்த படங்கள் எல்லாமே ஹிட் அடித்தது. தொடர்ந்து, புதுப்பேட்டை 2 ஸ்கிரிப்டினை இயக்குனர் செல்வா ஆரம்பித்ததும் அனைவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
ஆனால் ரசிகர்களுக்கு வேற லெவல் அதிர்ச்சியை கொடுத்தார் இயக்குனர் செல்வராகவன். . ஆயிரத்தில் ஒருவன் 2 ஆம் பாகம், 2024ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அதில் தனுஷ் நடித்து இருக்கிறார் என்றும் அவர் வெளியிட்டார். அதுமட்டுமின்றி செல்வராகவனின் 12வது படத்தின் சூட்டிங் அப்டேட்டும் இப்போது வெளியாகியுள்ளது. தற்போது அந்தப் படத்தினுடைய ஷூட்டிங் தொடங்கி உள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கிரியேஷன்ஸ் சார்பில் அந்த படத்தை தயாரித்து வருகிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’நானே வருவேன்’ என்கிற தலைப்பு வைத்துள்ளனர்.இந்த போஸ்டர் பார்க்கும்போது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கின்றது. இதோ அந்த போஸ்டர் உங்களுக்காக..