பொங்கல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அந்த வகையில் தைப்பொங்கல் ஸ்பெஷலாக கரும்பு சாறு பொங்கல் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க!
முதலில் தேவையான பொருட்களை பார்ப்போம்…கரும்பு சாறு ஒரு லிட்டர், அரிசி – அரை கப்,நெய் – விருப்பத்திற்கு ஏற்ப
சுக்கு – சிறிதளவு, முந்திரி – ஒரு கைப்பிடியளவு, திராட்சை – ஒரு கைப்பிடியளவு, பால் – அரை கப்
பொங்கல் செய்முறை
சுக்கை நன்கு பொடித்து கடாயில் நெய்யை விட்டு நெய் சூடானதும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக எடுத்து வையுங்கள். அந்த கடாயில் தயாராக வைத்துள்ள கரும்பு சாறை ஊற்றவும். பிறகு கரும்பு சாறை சற்று கொதிக்க விட்டு கரும்புசாறு கொதித்து வரும்போது போது அதனுடன் பாலை சேர்க்கவும்.
கொதித்துக் கொண்டிருக்கும் பால் கரும்பு சாறு கலவையில் இப்போது தயாராக வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். அரிசி மென்மையாக மாறும்வரை வேகவைக்க வேண்டும்.அது நன்றாக வெந்ததும் அதில் வறுத்த முந்திரி, திராட்சை, சுக்குத்தூள் சேர்த்து கிளறுங்கள். பின்னர் இறக்கி பரிமாறுங்கள்.
இப்போது உங்கள் உள்ளங்கையில் இருப்பது தான் இனிப்பான கரும்பு சாறு பாயாசம்