இந்திய விமானபடைக்கு பொதுத்துறை நிறுவனமான பெங்களூர் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL) நிறுவனத்திடம் இருந்து 83 இலகுரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில் 73 விமானங்கள் எல்.சி.ஏ தேஜஸ் எம்.கே-1 ரகமாகும். 10 விமானங்கள் எல்.சி.ஏ தேஜஸ் எம்.கே-1ஏ ரகத்தைச் சேர்ந்தது. இந்த பத்து விமானங்களும் வீரர்களின் பயிற்சிக்காக பயன்படுதப்பட உள்ளன. இந்த விமானங்களின் சிறப்பு குறித்து விமானப் படை தளபதி பதவுரியா கூறுகையில், “உள்நாட்டு தொழிலுக்கான பெரிய ஊக்கம் தேஜஸ் விமானங்கள். இது நம் நாட்டு வடிவமைப்பாளர்களுக்கான பெரிய அங்கீகாம்.
83 தேஜஸ் விமானங்களும் நான்கு படைப்பிரிவுகளை கவனிக்கும். எற்கனவே இரண்டு இலகுரக போர் விமான படைப்பிரிவுகள் நமக்கு உள்ளன. தற்போது அது 6 ஆக உயர்ந்துள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டு முயற்சியால் உருவான ஜெ.எப் – 17 போர் விமானத்தை விட இந்தியாவின் தேஜாஸ் விமானங்கள் சிறந்தது. அதுமட்டுமல்லாது நவீனமானதும் கூட” என்றார்.