உலகத்தில் வாழும் நிஜ அயன் மேன் என அனைவராலும் போற்றப்படும் நபர்தான் எலான் மஸ்க். இந்த உலகிலேயே முதன் முறையாக விண்வெளி ஆராய்ச்சி செய்யும் ஒரு தனியார் நிறுவனம் வைத்துள்ள பெருமை இவரையே சாரும். விண்வெளி ஆராய்ச்சி செய்யும் ஒரு தனியார் நிறுவனம் தான் ஸ்பேஸ் எக்ஸ். இதன் சி.இ.ஓ தான் எலான் மஸ்க் ஆவார்.
இந்த நிறுவனம் போக எதிர்காலத்தில் அனைவருக்கும் பயன்படக் கூடிய பேட்டரி கார்களை டெஸ்லா நிறுவனம் மூலம் உலகிற்கு இவர் விற்பனை செய்து வருகிறார். யூரின் டெஸ்ட்லா கார்களில் ஒன்றான டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் ஒன்று
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள அன்டர்க்ரவுண்டு கராஜில் தீப்பற்றி எரிந்துள்ளது இதற்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவரவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.