சியான் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் கோப்ரா. இந்த திரைப்படம் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
3 மொழி மக்களுக்கும் தலைப்பு தெரியவேண்டும் என்பதற்காக கோப்ரா என்று படக்குழு தலைப்பை வைத்திருக்கின்றது. கடினமான உழைப்பாளி விக்ரமுக்கு சமீபக் காலத்தில் எந்த படமும் பெரிய அளவில் பேரை வாங்கிக் கொடுக்கவில்லை. அதே நேரம் அவரது படங்கள் ஒவ்வொன்றுமேதனித்துவமாக நிலைத்து நிற்கின்றன.வசூல் நிலவரம் தான் தடையாக இருந்து வருகின்றது. எனவே இந்த கோப்ரா திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரமும் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்
கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் சியான் விக்ரம் கோப்ரா படத்தில் 7 கெட்டப்பில் நடித்திருக்கிறார். இதனுடைய முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கோப்ரா படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் .அந்த போஸ்டரில் விக்ரம் வயதான கதாபாத்திரத்துடன் இடம் பிடித்துள்ளார்.