தற்போது தமிழ் சினிமாவில் செம பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. லாக்டவுணுக்குப் பிறகு தனது முழு கவனத்தையும் சினிமா மீது மட்டுமே செலுத்தி வருகிறார். தற்போது இவருடைய ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ரெடி ஆகிக் கொண்டிருக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இந்த படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ரஜா பணியாற்றியுள்ளார் .இந்த படம் தயாரிக்கத் துவங்கிய சமயத்தில் இருந்தே பல பிரச்சினைகளையும், தடைகளையும் சந்தித்து வந்தது. தற்போது இந்த டீம் முழுவீச்சில் உழைத்து கொண்டிருக்கின்றனர்.
இதில் சிம்புவுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா,எஸ் ஏ சந்திரசேகர் ,இயக்குனர் பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா, கீர்த்தி உட்பட பலரும் நடித்து வருகின்றனர் .நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்தப் படத்தினுடைய புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. ஈஸ்வரன் வெளியிட்டு குஷியடைந்த சிம்பு ரசிகர்களுக்கு இது இன்னொரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.