நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப் படம்தான் ஈஸ்வரன். அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இவர் அடுத்ததாக நடிக்க உள்ள 10 தல என்கிற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை ஜில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணன் இயக்கி வருகிறார். படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக், சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வைரலாகி வருகின்றது.