விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை பாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர் சித்ரா. இவரது மரணம் சின்னத்திரை வட்டாரத்தை மட்டும் அன்றி அனைவரையுமே உலுக்கியது. சின்னத்திரை சித்ரா மரணம் தொடர்பாக ஹேமநாத் சிக்கியது எப்படி என்பது குறித்தும் ,சித்ராவை ஹேமநாத் எப்படி எல்லாம் சித்திரவதை செய்தார் என்பதை குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
கதிர் முல்லை ஜோடி என்றாலே பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நிலையில் இவர்களது ஸ்டேஜ் டான்ஸ் மக்களை கவர்ந்தது. இதுதான் ஹேமநாத் மனதிற்கு எரிச்சலைக் கிளப்பி உள்ளது. ஒருவேளை இவர்கள் 2 பேரும் டான்ஸ் ஆடும்போது நெருக்கம் கூடி விடுமோ? என்பதுதான் ஹேம்நாத் உடைய முதல் சந்தேகமாக இருந்தது. தம்பதிக்குள் இருந்த சந்தோசத்தை இந்த சந்தேகக்கோடு குத்திக் கிழித்தது. இது குறித்து சித்ராவிடம் தொடர்ந்து கேள்விகேட்டு வந்துள்ளார்.அதற்கு சித்ரா அவருக்கு கல்யாணமாகி விட்டது இது வெறும் டான்ஸ்தான்.. அது போக நாங்கள் இரண்டு பேரும் நல்ல நண்பர்கள் என்றெல்லாம் சித்ரா தந்த விளக்கம் ஹேம்நாத் மனதிற்கு திருப்தி தரவில்லை.
இதற்குப் பிறகுதான் அது போன்ற நெருக்கமான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று சித்ராவிடம் கூறி சண்டை போட்டுள்ளார் .கதிர் கல்யாணம் ஆனவர் அதனால் அவருடன் இனி டான்ஸ் ஆட முடியாது என்று முல்லையின் வாயாலே பலரது முன்பாக கூறவும் வைத்தாராம் ஹேமநாத்.இதனால் கதிர் மற்றும் சித்ரா இடையிலான நட்பில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.கதிர், முல்லை இடையே ஏதோ பிரச்சனை என்று சமூகவலைத்தள பக்கத்தில் கேள்விகள் வலம் வரத்தொடங்கியது .இதன் பிறகு இந்த பிரச்சனையால் சீரியலில் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று சம்பந்தப்பட்ட குழுவினர் மறுபடியும் இவர்கள் இரண்டு பேரையும் டிக் டாக் மூலம் சேர்த்து வைக்க முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து கதிர் முல்லைக்கு இடையே நெருக்கமான சீன்களும் சீரியலில் இடம்பெறத் தொடங்கியது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் சித்ரா ஹேம்நாத்தின் நிச்சயதார்த்தம், பதிவுத் திருமணம் ஆகியவையும் நடந்துள்ளது. அதற்குப்பின் ஹேம்நாத் அதிக உரிமையை கையில் எடுத்துக் கொண்டுள்ளார். தினம் தினம் சித்ராவிற்கு சித்திரவதையும் தொடர்ந்துள்ளது இந்த சீனில் எப்படி யாருடன் நடிக்க வேண்டும் என்று ஹேம்நாத்தான் சித்ராவிடம் கூறுவாராம். யார் யாருடன் சித்ரா பேசவேண்டும் என்பதையும் ஹேமநாதன் முடிவு செய்வாராம். அதுவரை இயக்குனரின் நடிகையாக இருந்த சித்ரா, ஹேம்நாத் ஆட்டிவைக்கும் பொம்மையாக மாறவேண்டிய சூழலுக்குள் வந்தார்.
ஏற்கனவே வீடு கட்ட வாங்கிய கடன், கடனில் வாங்கிய ஆடி கார், கல்யாண செலவு என பல பிரச்சினைகளில் சிக்கி தவித்து வந்துள்ளார் நடிகை சித்ரா இந்த நிலையில் ஹேமநாத் கொடுத்த குடைச்சல் காரணமாக கதறி கதறி அழுதும் உள்ளார் நடிகை சித்ரா . இறுதியில் சீரியலில் நடிக்க வேண்டாம் என்று ஹேம்நாத் அடுத்த டார்ச்சர் கொடுக்க தொடங்கி விட்டார்.
இதைத்தான் கடைசி நேரத்தில் தன் மாமனார் ரவிச்சந்திரனிடம் செல்போனில் சொல்லி அழுதிருக்கிறார் நடிகை சித்ரா. இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம் நடக்க இருக்கும் போது ஹேமநாத் செய்யும் சித்ரவதைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கண்ணீர்விட்டு அழுதுள்ளார் நடிகை சித்ரா.மாமனாருடன் சித்ரா பேசிய பிறகுதான் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்த செல்போன் ஆடியோவை அவசர அவசரமாக அளித்துள்ளார் ஹேமநாத். இறுதியில் இதே ஆடியோ தான் ஹேமநாதன் வசமாக சிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.