சித்தார்த் விபினை நாம் அனைவரும் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால் சிலர் இவரை நகைச்சுவை நடிகர் என்றும் கூட சொல்வார்கள். விஜய் சேதுபதி நடிப்பில் உருவான நகைச்சுவை கலந்த “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற திரைப்படத்தில் தான் இவர் பிரபலம்.
இவர் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல இசையமைப்பாளரும் கூட. கருப்பன் சித்தார்த் விபினுக்கு திடீரென திருமணம் நடந்து முடிந்துள்ளது. சித்தார்த் விபினுக்கும் ஷ்ரேயா என்பவருக்கும். நேற்று திருமணம் நடந்துள்ளது. இவர்களின் திருமணம் முழுக்க முழுக்க கேரள ஸ்டைலில் நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது. திருமணம் முடிந்த சித்தார்த் விபினுக்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.