பத்ம விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் நாட்டின் மிக உயரிய விருதுகளாகும். 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது அறிவிக்கப்படுகின்றன.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வா்த்தகம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க சாதனை அல்லது சேவை புரிந்தவா்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தை சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர், சுப்பு ஆறுமுகம், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, வேளாண்துறை பாப்பம்மாள், சமூக சேகர் சுப்புராமன், ஸ்ரீதர் வேம்பு, மருத்துவர் மறைந்த திருவேங்கட வீரராகவன் உள்ளிட்ட 40 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப் பிரிவில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.