மொபைல் போன்களின் வரவு வரலாறு காணாத வகையில் பெருகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பல புதிய கம்பெனிகளின் செல்போன்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வருகின்றன. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் சாம்ராஜ்யத்தில் தனக்கென தனிப்பங்கு வகித்து வருகிறது. நமக்கு எப்படி வாழ்க்கையில் முன்னேற்றம் அவசியமோ அதுபோலத்தான் மொபைல் போன்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் களும்.
மொபைல் போனில் கம்பெனியில் சாம்சங் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான One UI 3.0 நிலையான அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது. மேலும் இந்த புதிய மென்பொருள் அப்டேட் ஜனவரி 2020 security patch வசதியைக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இந்த அப்டேட் பெற்றுக் கொள்ளுமாறு சாம்சங் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.