சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த சசிகலா கடந்த மாதம் 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் இருந்து கடந்த 31-.ம் தேதி புறப்பட்டு பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டுக்குச். என்றார். இந்த நிலையில் சசிகலாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் உறவினரான இளவரசி இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த இளவரசிக்கு அங்கு கூடொயிர்ய்ந்தவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இளவரசியும் பெங்களூரில் சசிகலா தங்கியிருக்கும் பண்ணை வீட்டில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது.