முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருந்தௌ வரும் 27-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டத்உ. இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தஞ்சாவூரில் பேசுகையில், “சசிகலா விடுதலையாக உள்ள நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இத்தனை நாட்களாக இல்லாமல் விடுதலையாகும் நேரத்தில் சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது” என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் “நான்கு ஆண்டுகளாக சசிகலா உடல் நிலையில் ஒன்றுமில்லாத நிலையில் திடீர் என உடல் நலம் குன்றியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் டில்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.