அதிமுகவில் இருந்து கொண்டு சசிகலாவையும் அமமுகவையும் உயர்த்திப் பேசுவது ஏற்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் பேட்டி ஒன்றில் அமமுகவை சேர்ந்தவர்கள் எங்களின் சகோதரர்கள் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சசிகலா குறித்து பேசும்போது, அவர் கட்சியின் தலைவராக இருந்தவர். அவர் எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையாக போற்றக்கூடிய அம்மாவுடன் இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் என்றும் கருத்து தெரிவித்தார். இதனால் கட்சியில் இருவருக்கும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியது.அதிமுகவின் கொள்கையைக் கடந்த 2017 ஆம் ஆண்டு தெளிவுபடுத்தி விட்டோம். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தலையீடு இன்றி கட்சியும் ஆட்சியும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அதில் நீங்கள் தெளிவாக உள்ளதால் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை
.உதயநிதியின் பேச்சு ஒட்டுமொத்தமாக பெண்ணினத்தை அவமானப்படுத்தும் விதமாக இருப்பதை கருதி நாங்கள் அனைவரும் கண்டித்து இருந்தோம் ஆனால் கோகுல இந்திரா அதிமுகவில் இருந்து கொண்டு சசிகலாவை உயர்த்தி பேசுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.அவர் சார்ந்திருக்கும் இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கவேண்டும். யாராக இருந்தாலும் கட்சியின் கொள்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் அதுதான் மிகவும் முக்கியம்.
அதேபோல் ராஜேந்திர பாலாஜி கூறுவதையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்கள் நமக்கு சகோதரர்களா? கட்சி ஒரு முடிவெடுத்து விட்ட பின் அதைப் பின்பற்ற வேண்டும் அதுதான் மிகவும் முக்கியம்.இரட்டை இலை சின்னம் அதிமுகவின் மிகப்பெரிய சொத்து. இந்த மாதிரியாக கருத்துக்களைச் சொல்ல கூடாது என்று அவர் தெரிவித்தார்