சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் வைக்கப்பட்ட சசிகலாவுக்கு உடல் நலிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதற்கிடையே 4 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று முன்தினம் நிறைவு பெற்றது இதனையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார் ஆனால் அவர் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று இரவு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் சசிகலாவுக்கு 6 நாட்களுக்குப் பிறகு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் அவரது உடலில் சர்க்கரை அளவு 278 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக அவருக்கு இன்சுலின் செலுத்தி சிகிச்சை அளித்து வருகின்றோம். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் சிகிச்சைக்கு அவரது உடல் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா நாளை டிஸ்சார்ஜ் ஆக இருந்த நிலையில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதால் அவர் டிஸ்சார்ஜ் அவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இதனால் தொண்டர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்