முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 27-ம் தேதி விடுதலை ஆகும் நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
கடந்த 19ம் தேதி அவருக்கு அவர் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மூச்சுத்திணறல் அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஐசியுவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரலில் தொற்று இருப்பது சிடி ஸ்கேன் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுடன், ரத்த அழுத்தம், தைராய்டு பாதிப்பு இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு கொரோனா வைரஸால் ஏற்படும் நிமோனியா பாதிப்பு தீவிரமாக இருப்பதால் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவின் அளவு 95 சதவீதமாக இருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது