தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக பல்வேறு தேர்வு நடைமுறைகள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு முறையாக வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.அந்த வரிசையில் அறநிலையத்துறை சார்ந்த ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை http://www. tiruchendurmurugantemple. tnhrce.in/ என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்