ஜக்கி வாசுதேவ் கோவை வெள்ளியங்கிரியில் ஈசா யோகா மையம் நடத்தி வருகிறார். ஆதி யோகி சிலையை நிறுவி சிவராத்திரி தினத்தில் பஜனை, தியானம், சத்சங்கம் போன்றவை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அரசின் பிடியில் கோயில்கள் சரியில்லை என திடீரென கருத்து தெரிவித்துள்ளார். ஜக்கிவாசுதேவ் தனது ட்விட்டத் பக்கத்தில், “தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது.
ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல” என கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் அதில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மற்று ரஜினிகாந்த் ஆகியோரை டேக் செய்துள்ளார்.