குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கடந்த 5-ம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களாக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிருத்திவி மோகன் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் காமராஜ்-க்கு RTPCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் ஜனவரி 5-ம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரது சிடி ஸ்கேன் இயல்பான நிலையில் உள்ளது. அவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை, சாதாரணமாக ஒரு அரை காற்றில் கிடைக்கப்பெறும் ஆக்சிஜன் அளவு அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. வேறு எந்தவிதமான கூடுதல் ஆக்சிஜன் துணையும் அவருக்கு தேவைப்படவில்லை. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது