கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட 447 பேருக்கு லேசாக பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகள் கோவி ஷில்டு,கோவாக்சின் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது அதன் அடிப்படையில் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.இதில் 16ஆம் தேதி மட்டும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி போடப்படவில்லை.

தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் மணிப்பூர் ஆகிய 6 மாநிலங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. இதனால் நேற்று மட்டும் இந்திய அளவில் 17702 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 447 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டதாகவும் அதில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது அவர்களுக்கு காய்ச்சல் ,தலைவலி மற்றும் குமட்டல் ஆகிய பிரச்சனைகள் மட்டுமே இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
Tags: Corona Vaccine