கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது தடுப்பூசி குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் வைத்தார். இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி கூறுகையில், “கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது. மற்ற தடுப்பூசிகளை காட்டிலும் இந்திய தடுப்பூசிகள் விலை குறைவானவை. இந்திய தடுப்பூசிகளை பாதுகாத்து வைப்பது எளிது. இந்திய காலநிலைக்கு ஏற்ற வகையில் நாம் தடுப்பூசிகளை தயாரித்துள்ளோம். கொரோனாவுக்கு எதிரான போரில் நமது வெற்றியை தடுப்பூசி உறுதிப்படுத்தும். தடுப்பூசி வந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் மாஸ்க், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.