கொரோனா உலகநாடுகளையே உலுக்கி எடுத்துவருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் வந்த பொதுமுடக்கம் பலரது வேலையையும் காவுவாங்கிவி ட்டது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும் இன்னும் அதுவும் அனைவருக்கும் செலுத்தப்படவில்லை. இப்போதும் கரோனா உலக அளவில் தன் கோரமுகத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
உலகிலேயே மிக அதிகபட்சமாக ஒரேநாளில் அமெரிக்காவில் மட்டும் 3,880 பேர் கொரோனா வைரஸால் பலியாகி இருக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக மெக்ஸிகோவில் 1,539, பிரேசிலில் 1,335, இங்கிலாந்தில் 1,290 பேர் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஜெர்மனியில் 855, தென் ஆப்பிரிக்காவில் 647, ரஷ்யாவில் 612 பேர் ஒரு நாளில் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிட