பறவைக் காய்ச்சலானது கேரளாவில் உருவெடுத்தது இருக்கிறது. எனவே கோழி, வாத்து உள்ளிட்டவைகளை கேரளத்தில் இருந்து தமிழகம் கொண்டு வர தடைவிதித்து உத்தரவிட்டது தமிழக அரசு.
![](https://agamtamil.com/wp-content/uploads/2021/01/kerala-kozhi.jpg)
சில நாட்களுக்கு முன் கேரளாவின் ஆலப்புழா, கோட்டயத்தில் பரவிய பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்குள் வராமல் தடுக்கவே அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் கோழி, வாத்துகளின் முட்டை, இறைச்சி இதர தீவனங்களைக் கொண்டுவரும் வாகனங்களை திருப்பியனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரள, தமிழக எல்லையை முக்கியமான 6 மாவட்டங்கள் வாயிலாக கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் கால்நடைத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.