பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை இப்போது எப்படி உள்ளது இதுவரை சண்டை சச்சரவுகள் என இருந்த நிலையில் இந்த வாரம் என்டர்டைமெண்ட் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தவாரம் தான் கடைசி வாரம் என்பதால் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களை நல்லவராக காட்டிக் கொள்வதற்கு விரும்புவார்கள் அந்த வகையில் இன்றைய எபிசோடு முதல் ஆளாக தனியாக சென்று தானாக கேமரா முன்பு விளக்கம் கொடுத்துள்ளார் பாலாஜி.
![](https://agamtamil.com/wp-content/uploads/2021/01/Balaji-Big-Boss.jpg)
கிச்சன் ஏரியாவில் உள்ள கேமராவில் பேசிய அவர் என்னை கெட்டவனா நினைத்து விடுவார்களோ என்று பயந்து ஒதுங்கி தான் போய்க் கொண்டிருக்கிறேன் அஞ்சு வருஷத்துக்குமுன்னாடிதான் எனக்கு பிரேக்கப் ஆச்சு. அப்போது தான் ரொம்ப டிப்ரஷன் ஆகி இப்படி கோபப்பட்டேன். அதுக்கப்புறம் எந்த பிரச்சனை வந்தாலும் நான் ஒதுங்கி விடுவேன். ஆனால் உழைப்பதற்கு அங்கீகாரம் கொடுக்காமல் சோம்பேறி என்று கூறியதால் தான் எனக்கு கோபம் வந்துவிட்டது.
![](https://agamtamil.com/wp-content/uploads/2021/01/Big-boss.png)
ஆனா இங்கே கோபப்பட்டது எனக்கு குழப்பம் ஏற்படுத்தியது. என்னை காப்பாத்துன அனைவருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு நிஜமா தெரியல. புதுசா பொறந்த மாதிரி இருக்கு என்று அவர் கேமரா முன்பு பேசினார்