இன்றுமுதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் குளிர் முன்பை விட கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எனவே இந்த குளிருக்கு இதமாக இருக்கும் என யாரும் மது அருந்த வேண்டாம் என்றும் கூறியுள்ளது வானிலை ஆராய்ச்சி மையம்.
அதுபோக இந்த காலத்தில் சாலை எங்கும் பனிப்போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறதாம். காலை வேளையில் சாலைகள் முழுவதும் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகனங்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. காலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலைக்கு. தள்ளப்பட்டுள்ளனர்.
குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீமூட்டி குளிர்காய்கின்றனர். குளிர் தெரியாமல் இருக்க, மது பிரியர்கள் மது அருந்தும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வட மாநிலங்களில் வரும் நாட்களில் குளிர் மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையமானது எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை முழுவதும் தவிர்த்துக்கொண்டு வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வைட்டமின்-சி நிறைந்த பழங்களை உண்ணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான குளிர்ச்சியின் விளைவுகளை எதிர்கொள்ள உங்கள் சருமத்தை தொடர்ந்து ஈரப்பதமாக வைத்திருங்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆல்கஹால் உடல் வெப்பத்தை மேலும் வெகுவாக குறைத்துவிடும் என்பதனால் மது அருந்தவேண்டாம். வீடுகளிலோ அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களிலோ மது அருந்துவது நல்லதல்ல எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது