ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் மாடலானது 2021 ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்த ஏர்பார்ஸ்ன் பரோ லைட் ஆனது ஆப்பிள் நிறுவனம் 2019 ஆண்டு அறிமுகம் செய்த மாடலை விட விலை குறைவாக இருக்கும் என்ற செய்தி ஆப்பிள் பயனர்களின் காதுகளில் தேன் வந்து பாய்வது போல் இருக்கிறது.

இந்த புதிய லைட் வெர்ஷனில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படாது என்றும். ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் மாடல் விலை முந்தைய ஏர்பாட்ஸ் ப்ரோவை விட குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏர் பர்ட்ஸ் ப்ரோ லைஃப் தயாரிப்பிற்கு காரணம், ஏர்பாட்ஸ் ப்ரோ விற்பனையில் அமோக வரவேற்பை பெற்றதுதான் என்றும் கூறுகின்றனர்.
ஏர்பாட்ஸ் ப்ரோ லைட்ன் உற்பத்தி அடுத்த ஆண்டு தொடங்கப்பட இருக்கிறது. ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் ஆனது தோற்றத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கும் எனவும் தெரிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.