கன்னியாகுமரி எர்ணாகுளம் இடையே தனியார் ரயில் ஓடத் தொடங்கும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ரயில் சேவை படிப்படியாக தனியார்மயமாக்க மாற்றப்பட்டு வருகின்றது. இதன்மூலம் ரூபாய் 30,000 கோடி வரை வருவாய் ஈட்ட ரயில்வே தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக டெல்லி, லக்னோ அகமதாபாத் ,மும்பை ,இடையே தனியார் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. இவை லாபகரமாக ஓடி வருவதால் கூடுதல் தடங்களில் தனியார் ரயில்களை இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 12 மையங்களாக பிரித்து 152 தனியார் ரயில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மையத்தில் 28 தனியார் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் கன்னியாகுமரி – எர்ணாகுளம் கொச்சுவேலி – லும்டிங் கொச்சுவேலி -எர்ணாகுளம் சென்னை – மங்களூர் ஆகிய ரயில்கள் கேரளா வழியாக இயக்கப்பட உள்ளது. கொச்சுவேலி – லும்டிங் ரயில் இருந்து வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களிலும், லும்டிங்கில் இருந்து ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமை ஆகிய தினங்களில் புறப்பட உள்ளது.