குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தொடர் மழை காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் 46. 03 கன அடி எட்டியதாலும் அணைக்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் வரத்து இருப்பதாலும் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி உபரி நீர் வெளியேற்றம் செய்ய துவங்கியது. இதனால் தாமிரபரணி ஆற்றுக்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லவேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.