தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து மழை ,நடிகர் தனுஷுடன் இணைந்து திருவிளையாடல் ஆரம்பம், விஜயுடன் அழகிய தமிழ்மகன் போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

சினிமா வாழ்க்கையில் இப்படியே சென்று கொண்டிருந்தவருக்கு, கடந்த 2007 ஆம் ஆண்டு அடித்த பம்பர் பிரைஸ் தான் ‘சிவாஜி த பாஸ்’ இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் நினைத்துப் பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனையும் படைத்தது. அதன்பிறகு நடிகை ஸ்ரேயா இனிமே நம்ம தான் தமிழ் சினிமாவில் நம்பர்-1 கதாநாயகி என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அதன் பிறகும் இவருக்கு நல்லபடமாக அமையவில்லை.

அதனால் தமிழ் சினிமாவை விட்டு,விட்டு தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். நடிகை ஸ்ரேயா எப்பொழுதும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது அவருடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். தற்போது அதே போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்துவிட்டு ரசிகர்கள் ஸ்ரேயா கவர்ச்சியில் இறங்கி விட்டார் என சந்தோஷத்தில் உள்ளனர். தற்போது இந்த புகைப்படம்தான் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றது.அதில் குத்த வைத்து அமர்ந்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார் ஸ்ரேயா.