”அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்!
மனிதர்கள் மட்டும் தான் தங்கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் தாய்ப்பாசம்! இங்கேயும் அப்படித்தான் ஒரு யானையின் தாய்ப்பாசம் நம்மை புல்லரிக்க வைக்கிறது.
காட்டு யானை ஒன்று வனத்தில் இருந்து தன் குட்டியையும் அழைத்துக்கொண்டு நகர்ப்பகுதிக் கு வந்தது. அப்போது அந்தக் குட்டி யானை வழியில் ஒரு ஓடைக்குள் விழுந்துவிட்டது. உடனே தாய் யானை தன் தும்பிக்கையால் நீண்ட நேரம் போராடி அந்த குட்டியை சிற்றோடையில் இருந்து வெளியே தூக்கி எடுக்கிறது. இதை அப்பகுதியில் இருந்த மக்கள் பலரும் தங்கள் செல்போன் கேமராவில் பதிவு செய்ய அதுதொடர்பான காட்சிகள் இப்போது வைரலாகி வருகிறது.
தாய் பாசத்தில் மனிதன் என்ன ஐந்தறிவு ஜீவன்கள் என்ன எனக் கேட்கும் வகையில் இந்த தாய் யானையின் பாசம் இருக்கிறது. இதோ நீங்களே பாருங்களேன்..
Ji