குடியரசுதின விழா வரும் 26-ம் தேதி நடக்கிறது. கொரோனா பரவலை தவிற்க தமிழக அரசு வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் குடியரசு தின விழாவை காண வருவதை தவிர்க்க வேண்டும். குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் வழிகாட்டி நெறிமுறைப்படி சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 26-ம் தேதி காலை 8 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றி வைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது