மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி ரூபாய் 2.05 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் தேவ்லால் தாலுகாவில் உள்ள உம்ரானே என்ற அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் பதவி தான் ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் உள்ள கோவிலை புனரமைத்து அதை பராமரிக்க ரூபாய் 2.05 கோடியை செலவிடுவதாக கூறிய விஸ்வாஸ்ராவ் தேவாரே என்பவர் தான் அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் எடுத்துள்ளார்.
இதன் மூலம் அந்த கிராம பஞ்சயத்து தலைவர் பதவியை விஸ்வாஸ்ராவ் ரூபாய் 2.05 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இவ்வளவு பணம் கொடுத்து ஒரு கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் எடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் இந்த ஏலத்தின் ஆரம்ப கட்ட தொகை ரூபாய் 1.11 கோடி தான். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையம் 14,234 கிராம பஞ்சாய்த்துகளுக்கு ஜனவரி 15, 2021 ல் தேர்தல் நடைபெறும் என்றும் ஜனவரி 18 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.