ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக ஜப்பான் நாட்டில் குப்பைத்தொட்டிகள் ஒவ்வொரு பத்து அடிக்கும் இருக்கின்றது. எச்சில் துப்ப வருபவர்கள் கூட குப்பையில் துப்ப வேண்டுமென்ற நல்ல பழக்கத்தை அவர்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதே போல இந்தியாவும் செயல்பட்டுக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் பெருமை தான்.

உத்தர பிரதேச மாநிலத்தின் பெரிய நகரங்களில் கார்கள் உள்ளிட்ட ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புபவர்கள் மற்றும் குப்பை போடுபவர்களுக்கு வெகு விரைவில் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டு வருவதற்கு உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.