கேரள அரசு சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி விற்பனை நடந்தது. அதற்கான குலுக்கல் நேற்று திருவனந்தபுரத்தில் வைத்து நடந்தது. அதில் முதல் பரிசான 12 கோடி ரூபாய் XG358753 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு விழுந்துள்ளது. அது கொல்லம் மாவட்டம் ஆரியங்காவு பகுதியில் உள்ள ஒரு லாட்டரி விற்பனை நிலையத்தில் விற்பனை ஆகியுள்ளது. ஆனால் அந்த லாட்டரி சீட்டை யார் வாங்கினார்கள் என தெரியவில்லை. ![](https://agamtamil.com/wp-content/uploads/2021/01/images-19-1.jpeg)
![](https://agamtamil.com/wp-content/uploads/2021/01/images-19-1.jpeg)
இதையடுத்து லாட்டரி பரிசு விழுந்த அந்த அதிஸ்டசாலி யார் என கேரளமே தேடி வருகிறது. ஒரு லாட்டரிச் சீட்டு 300 ரூபாய் வீதம் 33 லட்சம் லாட்டரிச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு, அனைத்துச் சீட்டுகளும் விற்பனை செய்யப்பட்டன. இரண்டாம், மூன்றாம் பரிசுகளை வென்றவர்கள் விபரம் தெரியவந்த நிலையில் முதல் பரிசீன 12 கோடி ரூபாய் பெற்ற அதிஸ்டசாலி யார் என இதுவரை தெரியவில்லை