திருச்சி அருகே உள்ள மணச்சநல்லூரில் காதல் தோல்வி அடைந்ததால் திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் அருகே உள்ள மணச்சநல்லூரில் ஏரி மிஷின் தெருவில் வசித்து வந்தவர் காயத்ரி. இவருக்கு 27 வயது ஆகிறது. திருநங்கையான இவர் தனியே வசித்து வந்தார். அதே தெருவிலேயே அவருடைய தந்தை ஜோதியும் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் காயத்ரி இன்று அதிகாலை அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அவருடன் தங்கி இருந்த சக திருநங்கைகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் காயத்ரி அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபரை காதலித்து வந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரும் முதலில் நண்பர்களாக பழகி வந்தார்கள். நாளடைவில் அது காதலாக மலர்ந்துள்ளது. அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே செல்வதும் ,ஊர் சுற்றுவதுமாக இருந்துள்ளனர். ஆனால் கடைசியில் அந்த வாலிபர் காயத்ரியை திருமணம் செய்துகொள்ள முடியாது எனக் கூறிவிட்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டதால் காயத்ரி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.தற்போது இந்த சம்பவம் மணச்சநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.