தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது. தேசத்தின் வளர்ச்ச்சியையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. முன்பு இல்லாததைவிட தமிழகத்திற்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் ரூ.1.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் என்பதால் லாலிபாப் என்று கூறுவார்.
.அவருக்கு.பட்ஜெட்டை வரவேற்க மனது இல்லை. வரும் தேர்தலை பா.ஜ.க அ.தி.மு.க-வுடன் இணைந்து சந்திக்கும். எங்கள் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். சசிகலா தமிழகம் வந்தால் தான் அரசியல் சூழ்நிலை குறித்து தெரியும். ராகுல் காந்தி என்னதான் பிரச்சாரம் செய்தாலும் ஒன்றும் நடக்க போவதில்லை. இந்தியா முழுதும் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. ராகுல்காந்தி தமிழகத்துக்கு வந்துள்ளதால், இங்கும் காங்கிரஸ் காணாமல் போய்விடும். தமிழகத்தில் மூன்றாம் அணிக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அ.தி.மு.க, பா.ஜ., கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலையில் உள்ளது” என்றார்.