மெக்ஸிகோ நாட்டில் கட்டிட தொழில் செய்துவருபவர் ஆல்பர்டோ. இவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கிறார். ஆல்பர்டோவுக்கும் டிஜுவானா பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது.
கணவன் இல்லாத சமயத்தில் ஆல்பர்டோ அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுவருவது வழக்கம். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்ல வேண்டும் என நினைத்த ஆல்பர்டோ அந்த பெண்ணின் வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு சுரங்கப்பாதை தோண்டியுள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் ஜார்ஜ் வேலைக்கு போகும் சமயத்தில் சுரங்கப்பாதை வழியாக அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் செல்வாராம் ஆல்பர்டோ. சுரங்கப்பாதை வழியாகச் சென்று அந்த பெண்ணுடன் தனிமையில் இருப்பது வழக்கம்.
ஒரு நாள் அந்த பெண்ணின் கணவர் ஜார்ஜ் வேலைக்கு சென்றுவிட்டு வழக்கமான நேரத்தை விட முன்னதாக வீடு திரும்பியிருக்கிறார். அந்த சமயத்தில் அவரது மனைவி ஆல்பர்டோவுடன் இருந்ததை பார்த்திருக்கிறார் ஜார்ஜ். அதுமட்டுமல்லாமல் தனது வீட்டில் இருந்த சுரங்கப்பாதையையும் அப்போது கண்டுபிடித்திருக்கிறார் ஜார்ஜ். அந்த சுரங்கப் பாதை வழியாக சென்ற போது அது ஆல்பர்டோவின் வீட்டுக்குச் சென்றதை கண்டுபிடித்திருக்கிறார் ஜார்ஜ். இது ஜார்ஜ் மற்றும் ஆல்பர்டோ-வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் அங்கு வந்த போலீஸ் இருவரையும் அமைதி படுத்தியிருக்கிறார்கள். பின்னர் ஜார்ஜ் போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து ஆல்பர்டோ கைது செய்யப்பட்டார். கள்ளக் காதலிக்காக சுரங்கம் தோண்டிய கள்ளக் காதலனை என்ன சொல்ல?