கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த கொலையில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம் மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த தவுபீக் ஆகியோர் உடுப்பியில் வைத்து கைது செய்யப்பட்டனர். மேலும் இதகு திட்டமிட்ட காஜா முகைதீன், மொகபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாபர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதே சமயம் போலீஸ்காரர் வில்சன் கொலைக்கு துப்பாக்கி சப்ளை செய்த கோவையைச் சேர்ந்த ஷிஹாபுதீன் (40) வெளிநாட்டில் பதுங்கி இருந்தார். இதற்கிடையே கத்தாரில் இருந்து நேற்று சென்னை வந்த விமானத்தில் ஷிஹாபுதீன் பயணித்துள்ளார். இதை மோப்பம் பிடித்த என்.ஐ.ஏ ஷிஹாபுதீனை கைது செய்துளனர்.