தமிழகத்தில் பொழுதுபோக்கு சேனல்களில் முன்னிலை வகிக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கற்பனை கதையான நாகினி தொடர் ஏற்கனவே ஒளிபரப்ப பட்டு வருகின்றது. அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ‘நாகினி 5’ என்கிற புதிய தொடரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்ப இருக்கின்றது. இந்ததொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கின்றது.

முன்னதாக நாகினி தொடர் சன் டிவியில் ஒளிபரப்பானது. அதன் முதல் தொடரே சன் டிவியில் பெரிய அளவில் வெற்றிபெற்று எக்கச்சக்க பார்வையாளர்களைப் பெற்றது. ஹிந்தியில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் சுவாரஸ்யத் தன்மையோடு இருப்பதுதான் நாகினி தொடரின் வெற்றியின் ரகசியமாகும்.