கர்நாடகா பா.ஜ.க அரசு சட்டசபையில் நிறைவேற்றிய பசுவதை தடை சட்ட மசோதாவுக்கு மேல்சபையில் ஒப்புதல் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து பசுவதை தடைக்கு அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் வஜூபாய் வாலா ஒப்புதல் அளித்துள்ளார். இதை அடுத்து பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று கர்நாடகா அரசு கூறியுள்ளது. பசுவதை சட்டத்தின்படி மாடுகளை கொல்லக் கூடாது.
வயதான மாடுகளை வளர்க்க முடியாவிட்டால் அதை பராமரிக்க கோசாலைகளில் விட்டுவிட வேண்டும் 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளை கொல்ல உரிய முன் அனுமதி பெற வேண்டும். பசுவதை சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வழிவகை உள்ளது
Tags: Anti cow slaugter act