கர்நாடகா மாநிலத்தில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியதால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்திலுள்ள ஷிவமோகா மாவட்டத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்ததால் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டைனமைட் என்ற வெடிபொருளை ஏற்றி சென்ற வாகனம் வெடித்து சிதறியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என தகவல் கசிந்துள்ளது.
நேற்று இரவு நிகழ்ந்த இந்த வெடி விபத்தால் 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். இந்த வெடி விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.