சென்ற ஆண்டை புரட்டிப் போட்டு நம்மையே கதி கலங்க வைக்க செய்த வைரஸ் தான் கொரோணா. சீனாவின் வூகான் நகரத்தில் உருவான இந்த வைரஸ் உலக நாடெங்கும் பரவி உலக உருண்டையையே வைத்து விளையாடியது. இதன் விளையாட்டால் உலகமே ஸ்தம்பித்துப் போனது.இந்த விளையாட்டு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என கண்டறிந்து தீர்வு காண சீனா சென்றுள்ளது உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சி குழு.
கொரோனா வைரஸ் தோற்றம், அதன் தன்மை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது சீனா சென்றடைந்து விட்டனர். இந்நிலையில் கட்டாய தனிமைப்படுத்துதல் விதி காரணமாக ஆராய்ச்சியாளர்கள் வெளியே செல்ல சீனா தடை விதித்துள்ளது. தனிமைப்படுத்திக் கொள்ளும் காலம் முடிந்த பிறகு வூஹான் நகருக்குள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்வு காணுங்கள் மறுபடியும் எதையாவது கிளப்பி விடாதீர்கள்.