கேரளாவில் 28 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட கன்னியாஸ்திரி அபயா வழக்கில் பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் கொலை நடைபெற்ற மடத்தில் 27 மார்ச் 1992 ஆம் ஆண்டு திருட வந்த அடக்கா ராஜு என்ற திருடனின் சாட்சியம் முக்கிய பங்கு வகித்தது.
கொலை நடந்த தினத்தில் அடக்கா ராஜு சம்பவம் நடைபெற்ற மடத்தில் உள்ள அலுமினிய ராடுகளை திருட வந்துள்ளான். அந்த நேரத்தில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பாதிரியார்களை அந்த மடத்தில் பார்த்ததாக அவர் நீதிமன்றத்தில் உறுதியாக சாட்சியம் கூறியிருந்தார். ராஜூவின் சாட்சி வழக்கில் முக்கியமானதால் அதை மாற்றி கூற கேட்டும் அதற்கு பல கோடி ரூபாய் பணம் தருவதாகவும் கூறி பலர் ராஜூவை அணுகி பேரம் பேசியுள்ளனர். ஆனால் ராஜு தனது நிலைபாட்டில் உறுதியாக இருந்துள்ளான். இதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கன்னியாஸ்திரி மற்றும் பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
இந்த நிலையில் ராஜுவை விட்டு பிரிந்து சென்ற அவரது இரண்டு மகள்களும் ராஜுவின் பேட்டிகள் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து அவரிடம் மீண்டும் வந்து சேர்ந்துள்ளனர். அதே போல் பரம ஏழையான ராஜுவின் வாழ்க்கை நிலை குறித்தும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. மேலும் சிலர் அவருக்கு தெரியாமல் அவனது வங்கி கணக்கு எண்ணை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
இந்நிலையில் கிறுஸ்துமஸுக்கு பணம் எடுக்க வங்கிக்கு சென்ற ராஜூவுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவனது வங்கி கணக்குக்கு பலர் பல இடங்களிலிருந்து ரூபாய் 15 லட்சம் வரை அன்பளிப்பாக செலுத்தியிருந்ததுதான் அதற்கு காரணம். கேரளாவின் பல இடங்களிலிருந்தும் ராஜூவின் உறுதியை பாராட்டி பலர் பணம் அனுப்பி உள்ளனர்.
இது குறித்து கூறும் போது, பணம் எனக்கு பெரிய விஷயமல்ல, என் மகளை போன்ற அந்த பெண்ணுக்கும் இன்று நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதே எனக்கு முழு மகிழ்ச்சி என்கிறார் ராஜீ