ஹரியானாவில் யமுனா நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான நேபாள பெண்ணின் கணவர் விவசாயம் செய்துவருகிறார். இவருக்கு இரண்டுவயதில் ஒருமகள் உள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் ந மர்ம நபர்கள் 5 பேர் நுழைந்தனர்.
அவர்கள் அந்தபெண்ணின் கணவரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவரை கயிற்றால் கட்டிப்போட்டனர். பின்னர் கணவனின் கண்முன்னே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யத் துவங்கினர் .நான்கு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து ஐந்தாவது நபர் முயற்சிக்கும் போது அவருடன் போராடிய அந்த பெண் அவரை பலமாக தாக்கி தன்னை காப்பாற்றிக் கொண்டார்.

ஆத்திரமடைந்த அவர்கள் அந்தப் பெண்ணை கொடூரமாக தாக்கி துன்புறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது இத்தகைய சம்பவங்கள் நமக்கு பெருமளவில் உணர்த்துகின்றது.