சென்ற ஆண்டில் மார்கழிப் பனியில் நாம் எப்படி உறைந்து போனோம் என நினைவிருக்கிறதா? ஆம் அதை கடந்து நாம் இப்பொழுது தை மாதத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவின் தலைப் பகுதியில் உள்ள ஸ்ரீநகரில் தற்போது நம்மை விட கடும் குளிர் வாட்டி கொண்டிருக்கிறதாம்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலையை எட்டி மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. கடும் குளிரால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நீர்நிலைகள் உறைந்துபோய் வெள்ளயும் சொள்ளையுமாக காட்சி அளிக்கின்றது. இந்த பனி மூடடமானது குடிநீர் விநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் இந்த காலநிலைய எதிர்கொண்டு மக்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.